முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: நீர் மட்டம் 139.35 அடி
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது குறைக்கப்பட்டு, வைகை அணையில் இருந்து நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.;
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டத்தில் அனைத்து அணைகளும், நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் நீரில் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.
வைகை அணைக்கு தற்போது விநாடிக்கு 1495 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1269 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 69.29 அடியாக உள்ளது.
முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 139.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1797 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 556 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.