முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும்: பொதுப்பணித்துறை
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.;
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 139.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2021 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 556 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, முல்லை பெரியாறு அணையில் 26.8 மி.மீ., தேக்கடியில் 16 மி.மீ., மழை பதிவானது. இந்த மழை காரணமாக இன்று நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அணையின் நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.