பாதுகாக்க நினைக்கும் நாங்கள் தீவிரவாதிகள் உடைக்க நினைக்கும் நீங்கள் மிதவாதிகளா?
முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க நினைக்கும் நாங்கள் தீவிரவாதிகள், உடைக்க நினைக்கும் கேரளத்தவர் யார் ? தமிழக விவசாயிகள் பதிலடி
முல்லை பெரியாறு அணையினையும், ஐந்து மாவட்ட மக்களையும் பாதுகாக்க நினைக்கும் நாங்கள் தீவிரவாதிகள்? அணையை உடைத்து ஐந்து மாவட்டங்களையும் பாலைவனமாக்க நினைக்கும் கேரள அரசியல் பிரமுகர்கள் மிதவாதிகளா? என்று தங்களை விமர்சனம் செய்யும் கேரளத்தவர்களுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
கேரளாவில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள், யூடியூப்சேனல்கள் உட்பட அத்தனை தகவல் தொடர்பு சாதனங்களிலும் தமிழக ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தை தீவிரவாத கூட்டமைப்பு என்றும், நிர்வாகிகளை தீவிரவாதிகள் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், 'முல்லை பெரியாறு அணையினை பாதுகாத்து ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காக்க பாடுபடும் நாங்கள் தீவிரவாதிகளா? அணையை உடைத்து, இந்த ஐந்து தமிழக மாவட்டங்களையும் பாலைவனமாக்க துடிக்கும் கேரள பிரமுகர்கள் மிதவாதிகளா? என தங்களை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். எங்களை எப்படி விமர்சனம் செய்தாலும், நாங்கள் எங்கள் நிலையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் உறுதிபட கூறியுள்ளனர். சங்க நிர்வாகிகளின் இந்த கருத்துக்கு தமிழக ஐந்து மாவட்ட பொதுமக்களின் சார்பில் ஆதரவு பெருகி வருகிறது என்பது கூடான உண்மையாகும் என தமிழக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்..