முல்லைப்பெரியாறு அணை: மீண்டும் 136 எடியை எட்டிய நீர் மட்டம்
முல்லைப்பெரியாறு அணையில் 20 நாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.;
முல்லைப்பெரியாறு அணை.
முல்லைப்பெரியாறு அணையில் கடந்த 20 நாட்களாக மழை குறைவாக இருந்தது. இதனால் நீர் மட்டம் மளமளவென சரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கி உள்ளது. இன்று பெரியாறு அணை, தேக்கடி பகுதிகளில் தலா 21.6 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அணை நீர் மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. வைகை அணைக்கு நீர் வரத்து 900ம் கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 769 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 70.05 அடியாக உள்ளது.