முல்லை பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது

முல்லைப்பெரியாறு அணையி்ல் பெய்து வரும் பலத்த மழையால் நீர் மட்டம் 130 அடியை கடந்தது.;

Update: 2022-05-16 03:30 GMT

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டம், முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.3 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 19.6 மி.மீ., மழை பெய்தது. போடியில் 12.4 மி.மீ., கூடலுாரில் 18.4 மி.மீ., மழை பெய்தது. தற்போது முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மழை பெய்ததால் நீர் வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும்.

அணையி்ல் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ளது. இதனால் வழக்கம் போல் ஜூன் முதல் தேதி அணையில் இருந்து தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News