முல்லை பெரியாறு அணையில் 152 அடி: கூடலூரில் பொங்கல் வைத்து போராட்டம்

முல்லை பெரியாறு அணையில், 152 அடி நீர் தேக்க வலியறுத்தி, கூடலூரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-12-04 12:15 GMT

கூடலுாரில் விவசாயிகள் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு அணையில்,  நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், இடுக்கி மாவட்டத்தை மீண்டும் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும், 1300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் மதுரை குடிநீர் திட்டத்திற்கு லோயர் கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதை நிறுத்தி, கால்வாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகளை வலியுறுத்தி,  கூடலூரில் வரும் இன்று விவசாயிகள் 152 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் அடுப்பு, விறகு, பொங்கல் வைக்க தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் தயாராக வைத்திருந்தனர். பெண்கள் பொங்கல் பானைகளுடன் மட்டும் வந்தனர். கூடலுார் பஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் ரோட்டோரம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினர். கூடலுார் முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News