41 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கிய முல்லை பெரியாறு அணை

41 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லை பெரியாறில் இருகரைகளையும் மூழ்கடித்த வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது.;

Update: 2021-12-06 12:00 GMT

வீரபாண்டி முல்லை பெரியாற்றில் நாற்பத்தி  ஓரு ஆண்டிற்கு பின்னர் இருகரைகளையும் மூழ்கடித்து வெள்ளம் சென்றது.

தேனி வீரபாண்டியில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லைபெரியாறு பொங்கி இருகரைகளையும் மூழ்கடித்து வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

தேனி மாவட்டத்தில் கடந்த 1980ம் ஆண்டு பெய்த பலத்த மழையில் முல்லை பெரியாறு பொங்கி இருபக்கமும் கரைகளை மூழ்கடித்து விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அப்போது பொதுமக்கள்  வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். தற்போது 41 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று பெய்த பலத்த மழையில் இன்று வீரபாண்டி முல்லைபெரியாறு பொங்கி வழிந்தது. ஆற்றின் இருகரைகளும் மூழ்கடிக்கப்பட்டு வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்தது. நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று மாலை 5 மணி வரை ச கூட குறையவில்லை. இதனை தேனி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News