தேனி மாவட்டத்தில் சராசரி அளவை விட இந்த ஆண்டு 70 சதவீதம் மழை அதிகம்

தேனி மாவட்டத்தில் சராசரி மழையளவை விட இந்த ஆண்டு எழுபது சதவீதம் அதிகளவு மழை பெய்துள்ளது.

Update: 2021-12-25 03:26 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு வழக்கத்தைவிட 70 சதவீதம் வரை அதிகளவு மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தின் சராசரி மழையளவு 829.80 மி.மீ., ஆகும். ஆனால் பல ஆண்டுகளாக இந்த சராசரி மழையளவை விட குறைந்த அளவே மழை பதிவானது. இந்த ஆண்டு மிகவும் அதிகமாக மழை பெய்தது. இந்த ஆண்டு பெய்த மழையளவு 1391.65 மி.மீ., ஆகும். அதாவது கணக்கீட்டின்படி வழக்கமான மழையளவை விட 561.85 மி.மீ.,மழை கூடுதலாக பெய்துள்ளது. ஆனால் மழைமாணி இல்லாத இடங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது. இதனால் மழையளவை துல்லியமாக கணக்கிடமுடியவில்லை.

சராசரி அளவீட்டின்படி வழக்கமான மழையளவை விட இந்த ஆண்டு 70 சதவீதம் அதிகமாக இருந்தது. இருப்பினும் உண்மையில் மழையளவு இன்னும் சிறிது அதிகமாகவே இருக்கலாம் என தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News