திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்; இந்து எழுச்சி முன்னணி கடும் கண்டனம்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.;

Update: 2024-09-23 01:43 GMT

தேனி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அலுவலகத்தில் வாரவழிபாட்டு கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர பொதுச் செயலாளர் சிவராமன் தலைமை வகி்ததார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி  முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ்  வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இந்துக்கள் புனித தெய்வமாக வழிபடும் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு, மற்றும் மீன் எண்ணெய் போன்ற பொருட்களை கலப்படம் செய்து விநியோகித்தது கோடான கோடி இந்து பக்தர்களின் மனதில் மிகுந்த வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வுக்கு காரணமாக இருந்த கடந்த கால ஆட்சியாளர்கள், தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் நெய் விநியோகம் செய்த நிறுவனத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க வேண்டும்.

மேலும் இந்த நிகழ்வானது திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நிய சக்திகளின் சதியாக இருக்குமோ? என்ற சந்தேகம் தேனிமாவட்ட இந்து எழுச்சி முன்னணி கருதுகிறது எனவே இந்த அபத்தமான காரியத்தை செய்த கயவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும் என ஆந்திர மாநில அரசை இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் தெரு நாய் கடியால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எனவே மத்திய மாநில அரசுகள் மனித உயிர்களை காப்பாற்ற தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியை துரிதமாக ஆற்றவேண்டும் என தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News