தேனி மாவட்டத்தில் இன்று 386 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் 386 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.;

Update: 2021-12-04 02:01 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று 386 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இன்று நடக்கும் முகாம்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 900ம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 37 ஆயிரத்து 50 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படுகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கும் முகாமில் இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 950 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவி்த்தனர்.

Tags:    

Similar News