தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது
மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இன்றும் இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் தேனி மருத்துவக் கல்லுாரியில் பணிபுரியும் செவிலியர். இவர் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர். இருப்பினும் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தடுபபூசி போட்டவர்களையும் கொரோனா பாதிக்கிறது. மக்கள் முக கவசம் அணிந்து கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து, சமூக இடைவெளி கடைபிடித்து தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொற்று அதிகரித்தாலும் இது நான்காவது அலையின் தொடக்கம் என கூற முடியாது என்றும் மருத்துவத்துறையினைர் தெரிவித்தனர்.