மதுவால் தடைபட்ட திருமணம்: விரக்தியில் இளைஞர் தற்கொலை

மது அருந்தியால் திருமணம் நடைபெறாத ஏக்கத்தில் மனம் உடைந்த இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-10 02:35 GMT

பைல் படம்.

தேனி ஓடைப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 25. புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்த இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் இவருக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை.

தனது மதுப்பழக்கத்தால் திருமணம் தடைபடுகிறது என மனம் உடைந்த முத்துக்குமார் விஷம் குடித்தார்.  இதனையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News