டாஸ்மாக் கடை வேண்டாமாம் காரணம் தெரிஞ்சா அதிர்ந்து போவீங்க...

அனுமதியின்றி மதுபானம் விற்கும் வியாபாரிகள் பலர் டாஸ்மாக் கடை வைக்க கூடாது என்று மக்களை போராட துாண்டி விடுகின்றனர்.;

Update: 2023-12-03 08:00 GMT

அனுமதியின்றி மதுபானம் விற்கும் வியாபாரிகள் பலர் டாஸ்மாக் கடை வைக்க கூடாது என்று மக்களை போராட துாண்டி விடுகின்றனர். இதனால் கடை வைக்க பரிந்துரைப்பதா, வேண்டாமா? மாவட்ட போலீஸ் அதிகாரிகளே பல நேரங்களில் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.

தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல இடங்களில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வர்கள் ஒரு குழுவாக இருந்து கொண்டு சரக்குகளை தேவையான இடத்திற்கு சப்ளை செய்து தங்கள் வருவாயினை பெருக்கி வருகின்றனர். சில கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுகிறது என நினைக்கும் போலி மதுபான வியாபாரிகள் அப்பகுதியில் உள்ள சிலரை துாண்டி விட்டு, டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தை உருவாக்கி விடுகின்றனர்.

எஸ்.பி., உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த முறையற்ற வணிகர்களே சிலரை தயார் செய்து போராட்டத்தை துாண்டி விடுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. முறையற்ற வணிகர்களிடம் ஸ்டேனுஷன்களில் பணி புரியும் முக்கிய அதிகாரிகள் சிலர், மாதாந்திர கமிஷன் வாங்குவதால், அவர்களும் இந்த பகுதிக்கு மதுக்கடை வேண்டாம் என தங்களது உயர் அதிகாரிகளுக்கே பரிந்துரைக்கின்றனர்.

டாஸ்மாக் கடையை நிறுத்தினால் அனுமதியற்ற மது வியாபாரமும், கள்ளச்சாராயமும் மீண்டும் அதிகரிக்கும். டாஸ்மாக் கடை நடத்துவதில் குழப்பம் உள்ளது. இந்த குழப்பத்தை போலி மது வியாபாரிகளே உருவாக்குகின்றனர். கடை மட்டும் இல்லாவிட்டால், இவர்களின் வியாபாரத்தை தடுப்பது மிகவும் சிரமமான காரியம். டாஸ்மாக் கடை வேண்டும் என்று பரிந்துரைப்பதும் சட்டப்படி மிகப்பெரிய தவறு, அனுமதியற்ற வியாபாரிகளை தடுக்க வேறு வழிகளும் இல்லை. ஆனால் மாவட்டத்தில் பல கிராமங்களில் இது போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன என்பதால், மாவட்ட போலீஸ் நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

Tags:    

Similar News