வாகனப்பேரணி: களம் இறங்கும் ஐந்து மாவட்ட தமிழக விவசாய சங்கங்கள்
தேனி மாவட்டத்தில் ஐந்த மாவட்ட விவசாய சங்கங்கள் நடத்தும் இருசக்கர வாகன பேரணியில் பல விவசாய சங்கங்கள் பங்கேற்கவுள்ளன;
தேனி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் இருசக்கர வாகன பேரணியில் தமிழகத்தில் உள்ள அத்தனை விவசாய சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையினை காப்போம், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 5ம் தேதி நடத்த உள்ள இருசக்கர வாகன பேரணியில், தமிழகத்தில் உள்ள அத்தனை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிலை உருவாகி வருகிறது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் நிறுவனர் நல்லசாமி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில பொதுச்செயலாளர் சிதம்பரம், ரவீந்திரன் உட்பட பலர் டிசம்பர் 5ம் தேதி பேரணியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். இன்னும் பல சங்க நிர்வாகிகள் தங்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் புறப்படுகின்றனர். தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்களே பலரை பங்கேற்க வேண்டாம் என்றும், அதிக கூட்டம் கூடினால் அமைதிப் பேரணி திசை மாறி விடும் என்றும், கட்டுப்பாடாக சிலர் மட்டும் வாருங்கள் என வேண்டுகோள் விடுத்து வருவதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.