தேனி அருகே கோடாங்கி பட்டியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

தேனி அருகே கோடாங்கி பட்டியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-04-22 03:33 GMT

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் போதுமணி. இவரும் ஹரிகரன், நதீஸ் ஆகியோரும் திருச்செந்துார் வடக்கு காலனியில் கஞ்சா விற்றனர். பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., அசோக்  தலைமையிலான போலீசார் தகவல் அறிந்து ரெய்டு சென்றனர். போலீசாரை கண்டதும் இவர்கள் கஞ்சாவுடன் தப்பி ஓடி விட்டனர். போலீசார் ஹரிகரனை மட்டும் விரட்டிபிடித்து அவரிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News