மதுரை- ஆண்டிபட்டி இடையே வரும் ஏப்ரல் முதல் ரயில் இயக்கம்

மதுரை- ஆண்டிபட்டி இடையே வரும் ஏப்ரல் மாதம் முதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.;

Update: 2022-03-21 03:08 GMT

பைல் படம்.

மதுரை- போடி இடையே 96 கி.மீ., துாரம் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது தேனி வரை பணிகள் முடிந்து விட்டாலும், ஆண்டிபட்டி- தேனி இடையே நடைபெற்ற அதிவே என்ஜின் சோதனை ஓட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திருப்தி தெரிவிக்கவில்லை.

இதனால் அவர் சில திருத்தங்களை செய்ய சொல்லி இருக்கிறார். மீண்டும் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்த பின்னரே மதுரை- தேனி இடையே ரயில் இயக்க முடியும். தற்போது முதல் கட்டமாக ரயில் மதுரை- ஆண்டிபட்டி இடையே இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் முதல் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மதுரையில் தினமும் காலை 8.30 மணிக்கு புறப்படும் ரயில் 9.03க்கு உசிலம்பட்டிக்கும், 9.35க்கு ஆண்டிபட்டிக்கும் வந்து சேரும் என தெரிகிறது. மாலையில் ஆண்டிபட்டியில் மாலை 6.20க்கு புறப்பட்டு, 6.45 மணிக்கு உசிலம்பட்டிக்கும் 7.35 மணிக்கு மதுரைக்கும் சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News