குறைந்தது காய்கறி விலை... அதிகரித்தது பழங்களின் விலை...
தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை இறங்கி வரும் நிலையில் பழங்களின் விலை அதிகரித்து வருகிறது
தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை இறங்கி வரும் நிலையில், பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் சற்று இறங்கி வருகின்றன. தக்காளி இன்று கிலோ 40 ரூபாய்க்கு வந்து விட்டது. ஆனால் பழங்களின் விலை விர்ரென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ மதுளை முதல் ரகம் 250 ரூபாய், ஆப்பிள் 150 ரூபாய், ஆரஞ்சு 150 ரூபாய், திராட்சை 100 ரூபாய், கொய்யாப்பழம் (சிவப்பு) நுாறு ரூபாய், வெள்ளை கொய்யா அறுபது ரூபாய் ஆக உயர்ந்து உள்ளது. பனங்கிழங்கு 5 கொண்ட ஒரு கட்டு 80 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் உச்சத்தில் உள்ளதால் பழங்களின் தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.