தேனி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்த கொரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து இன்று காலை நிலவரப்படி 7 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை கடுமையாக இருந்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தொற்று பரவல் அதிகரித்து தினசரி பாதிப்பு தொள்ளாயிரத்தை எட்டியது.
அதேபோல், இறப்பு எண்ணிக்கையும் மிக, மிக அதிகமாக இருந்தது. மக்கள் பெருமளவில் அச்சமடைந்தனர். இந்நிலையில் பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கி ஜூலை மாதம் முதல் வாரம் தினசரி பாதிப்பு நுாறுக்கு கீழே வந்தது.
இரண்டாவது வாரம் மேலும் குறைந்து தினசரி பாதிப்பு இரட்டை இலக்கத்திற்கு வந்தது. இன்று முதன் முறையாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது. மாவட்டத்தில் ஏழு பேருக்கு மட்டுமே இன்று தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையும், மருத்துவத்துறையும் நிம்மதி அடைந்துள்ளனர். மக்கள் மத்தியில் அச்சம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளனர்.