தேனி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 26ல் மெகா லோக்அதாலத்
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வரும் ஜூன் 26ம் தேதி மெகா லோக் அதாலத் நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, தேனி, உத்தமபாளையம் வட்டார சட்டப்பணிகள் குழு சார்பாக வரும் ஜூன் மாதம் 26ம் தேதி மெகா லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு விசாரணை நடத்துகிறது. நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கள், சொத்துப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வழக்குகள், பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்றங்கள், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன், காசோலை வழக்குகள், குடும்ப வன்முறை, நுகர்வோர் வழக்குகள், இதர பொதுபயன்பாட்டுவழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் பிரச்னைகளுக்கு சமாதானமாகவும், விரைவாகவும் தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமர்வு நீதிபதியுமான சஞ்சய்பாபா தெரிவித்துள்ளார்.