தமிழகம்- கேரளாவில் ஒரே நேரத்தில் ஊரடங்கு: வெறிச்சோடிய சோதனைச்சாவடிகள்

தமிழகம், கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இருமாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன.

Update: 2022-01-23 09:00 GMT

போடி குரங்கனியில் உள்ள தமிழக போலீஸ் சோதனை சாவடி ஊரடங்கால் மூடப்பட்டது.

தமிழகத்தில் இன்று மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கேரளாவில் ஒரே நேரத்தில் இந்த வாரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இரு மாநில எல்லைகளிலும் உள்ள சோதனைச்சாவடிகளும் மூடப்பட்டன.

கனரக வாகனங்கள் கூட சோதனைச்சாவடிகளுக்கு அருகேயே நிறுத்தப்பட்டன. எந்த ஒரு வாகனமும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாளை காலை 6 மணிக்கு மேல் தான்,  ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் அதுவரை வந்த சரக்கு, மற்றும் போக்குவரத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

இந்நிலையில் இரண்டு முழு ஊரடங்களில் 100 சதவீதம் ஒத்துழைப்பை வழங்கிய மக்கள், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. தேனி மாவட்டத்தில் அத்தனை நகராட்சிகள், பேரூராட்சிகளி்ல மெயின் ரோடுகள் முழுக்க வெறிச்சோடி கிடந்தன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் வசிப்பிட பகுதிக்குள் இயல்பான நிலையே காணப்பட்டது. பலசரக்கு கடைகளில் கூட அவ்வப்போது திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. கிராமங்களில் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டாலும், வீதிகள் இயல்பான நிலையிலேயே காணப்பட்டன.

Tags:    

Similar News