பேருந்துகள் சென்ற சாலை. இன்று டூ வீலர்கள் செல்லக்கூட வழியில்லை
தேனி எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்த்துள்ளனர்
தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, ராஜவாய்க்கால் பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் தேனியில் ஒரு காலத்தில் பேருந்துகள் சென்று வந்து கொண்டிருந்த ரோட்டில் இன்று டூ வீலர்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு கடும் நெரிசல் நிலவுகிறது. அந்த அளவுக்கு ரோடுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.
தேனியில் எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்கள் மிகவும் முக்கியமானவை. முழுக்க வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த தெருக்களில் மக்கள் நடமாட்டமும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இந்த சாலையில் தான் பள்ளிப்பேருந்துகள் சென்று வந்து கொண்டிருந்தன. அந்த அளவுக்கு இந்த ரோடுகள் அகலமானதாக இருந்தது.
தற்போது இந்த ரோடுகளில் மிகவும் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன. ரோட்டை ஆக்கிரமித்து இருபுறமும் கான்கிரீட் கட்டடம் கட்டி விட்டனர். இதனால் ரோடுகள் குறுகி விட்டன. தவிர சாலையோர கடைகளும் நுாற்றுக்கணக்கில் உருவாகி விட்டன.
இதன் விளைவு இந்த ரோடுகளில் தற்போது டூ வீலர்களில் கூட செல்ல முடியவில்லை. நடந்து தான் செல்ல வேண்டும். நடந்து செல்லும் போது கூட நெரிசல் இருக்கும் அளவுக்கு ரோடு குறுகி விட்டது. அதிகளவு கூட்டமும் வந்து செல்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண ரோட்டோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளையாவது அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி நகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.