தேனி மாவட்டத்தில் அலங்காரமீன்கள் வளர்க்க மானியத்துடன் கடனுதவி

அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் தொழில் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

Update: 2023-11-23 15:17 GMT

தேனி மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) 2021-22-ம் ஆண்டிற்கு கொல்லைப்புற / புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

கொல்லைப்புற / புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், (Backyard Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 10-அலகுகள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவில் 3-அலகுகள் மற்றும் மகளிர் பிரிவில் 4-அலகுகள் ஆக மொத்தம் 17-அலகுகள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3,00,000/-ல் 40% மானியமாக ரூ.1,20,000/- மற்றும் ஆதிதிராவிடர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.1,80,000/- வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 3-அலகுகள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவில் 1-அலகு மற்றும் மகளிர் பிரிவில் 1-அலகு ஆக மொத்தம் 5-அலகுகள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8,00,000/-ல் 40% மானியமாக ரூ.3,20,000/- மற்றும் ஆதிதிராவிடர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60% மானியமாக ரூ.4,80,000/- வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு திட்டங்களில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேனி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வைகை அணையில் உள்ள உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04546- 291891 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News