பொங்கல் தொகுப்பு பணம் பெரும் பயனாளிகள் பட்டியல்!

மாநிலம் முழுவதும் ரேஷன் கடை வாரியாக, பொங்கல் தொகுப்பும், பணமும் பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-09 03:30 GMT

பொங்கல் பணம், தொகுப்பு பெறுவதற்காக தேனி மாவட்டத்தில் டோக்கன் வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வரும் பொங்கல் விழாவிற்காக ரேஷன் கடைகள் மூலம் அரிசி, ஜீனி, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் யார் யாருக்கு பொங்கல் தொகுப்பும், பரிசும் வழங்க வேண்டும் என்ற பட்டியலை அரசு ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது. இந்த பட்டியலில் அரசு ஊழியர்களும் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு பணியில் இருந்தாலும், அந்த குடும்பத்திற்கு பொங்கல் தொகுப்பும், ஆயிரம் ரூபாயும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களில் யார் அரசு ஊழியர் என்பது கடை பணியாளர்களுக்கு தெரியாது. எனவே யார், யாருக்கு பொங்கல் தொகுப்பும், பணமும் வழங்க வேண்டும் என அரசு கடை வாரியாக பட்டியலை கொடுத்து விட்டது. ரேஷன் கடை பயனாளிகள் தங்கள் கார்டினை கொண்டு வந்தால், அந்த கார்டு அரசு வழங்கிய பட்டியலில் உள்ளதா என்பதை கடை பணியாளர்கள் சரி பார்த்த பின்னரே டோக்கனை தருகின்றனர்.

அரசின் இந்த முயற்சி நல்ல முயற்சி தான். ஆனாலும் டோக்கன் வாங்க வரிசையில் நிற்பவர்களில் பலர் கோடி ரூபாய் செலவில் வீடு கட்டியவர்கள். டோக்கன் வாங்க வரும் போதே குறைந்தபட்சம் 10 பவுன் முதல் அதிகபட்சம் 20 பவுன் வரை கழுத்தில் நகை போட்டுக் கொண்டு டோக்கன் வாங்க வருகின்றனர். இது மட்டும் சற்று உறுத்தலாக உள்ளது. அதாவது சமூகத்தில் நல்ல பொருளாதார வளத்துடன் இருப்பவர்கள் கூட, ஆயிரம் ரூபாய்க்கும், பொங்கல் தொகுப்பிற்கும் கையேந்தி நிற்கின்றனர். இது சங்கடமாக உள்ளது. அரசின் குற்றமா? அல்லது மக்களின் பேராசையா என தெரியவில்லை என கடை பணியாளர்களே புலம்புகின்றனர்.

Tags:    

Similar News