கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்

கம்பம் அருகே, தந்தையை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியாத துயரத்தில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-30 03:00 GMT

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு ரோட்டில் வசிப்பவர் சுல்த்தான் இப்ராஹிம். இவர் மதுவிற்கு அடிமையானவர். இவரது மகன் அப்துல்கபூர், 17. பிளஸ் 2 மாணவரான இவர், தந்தையிடம் மதுப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

எனினும், தந்தை கேட்கவில்லை. இதனால் மனம் உடைந்த அப்துல்கபூர்,  வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News