தேனி நாடார் தலைவருக்கு லயன்ஸ் கிளப் பாராட்டு விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகனுக்கு லயன்ஸ் கிளப் சார்பி்ல் பாராட்டு விழா நடந்தது.;

Update: 2022-06-16 07:03 GMT

தேனி மேலப்பேட்டைஇந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகனுக்கு லயன்ஸ் கிளப் சார்பாக பாராட்டு விழா நடந்தது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகளுக்கு கடந்த மாதம் முறைப்படி தேர்தல் நடந்தது. இதில் தலைவர் ராஜ்மோகன் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றினர். ராஜ்மோகன் லயன்ஸ் கிளப்பில் தங்கமண்டல தலைவராகவும் இருக்கிறார். இதனை தொடர்ந்து ராஜ்மோகனுக்கு தேனியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாராட்டு விழாவில் மாவட்ட லயன்ஸ் சங்கங்கள், தேனி தென்றல், தேனி சில்வர் ஜூப்லி, தேனி வைகை, தேனி ஹனீபி, தேனி ராயல்ஸ், தேனி முல்லை லயன்ஸ் மற்றும் லயன்ஸ் கிளப் மண்டல நிர்வாகிகள், சமூக நல்லிணக்க பேரவையினர் பங்கேற்றனர். தங்கமண்டல தலைவர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News