ஆண்டிப்பட்டி: லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி அமைப்பினர் ஆண்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-25 11:16 GMT

மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி அமைப்பினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலுார் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தான் படித்த கிறிஸ்த்தவ கல்வி நிறுவனம் தன்னை மதமாற்றம் செய்ய வலியுறுத்தி துன்புறுத்தியது என கூறியிருந்தார்.

இதனால் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் முன்னிலை வகித்தார். நகர தலைவர் பகவதிராஜ் வரவேற்றார்.மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், உமையராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் முருகன்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காமயகவுண்டன்பட்டியி்ல் மாவட்ட செயலாளர் சசிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் வீரமுத்துராஜா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறுப்பாளர் கணேசன், மாவட்ட செயலாளர் லோகநாதன், கணேசன், ராமகிருஷ்ணன், பாலமுருகன், கம்பம் பா.ஜ., நகர தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News