மாநிலம் முழுவதும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் முகாம்கள் தொடக்கம்
மாநிலம் முழுவதும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.;
மாநிலம் முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், இறந்த இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கல் தொடர்பான முகாம்கள் இன்று தொடங்கின.
இந்த மாதம் இன்றும், நாளையும் (நவம்பர் 13 சனிக்கிழமை, நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் முகாம்கள் நடக்கிறது. அடுத்து நவம்பர் 27 மற்றும் நவம்பர் 28ம் தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம்கள் நடக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய முகாம்கள் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதேபோல் இந்த மாதம் மட்டும் நான்கு நாட்கள் முகாம்கள் நடக்கிறது. வாக்காளர்கள் சேர்ப்பது, இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்களை நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது உட்பட அத்தனை பணிகளும் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்பட உள்ளன என தேனி மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.