தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ் மொழி: மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை தேவை

lagging of tamil language in internet உலக இணைய பயன்பாட்டில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில், தமிழ்மொழியின் பயன்பாடு உலக அளவில் 60வது இடத்திற்கு பின்தங்கி விட்டது.இதற்கு மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா? என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-03-22 15:31 GMT

 மதுரையில் நடந்த இணையத்தில் தமிழ் தொடர்பான கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாரதி தேனி எழுத்தாளர் சுப்பிரமணிக்கு பரிசு வழங்கினார்.

lagging of tamil language in internet

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட அளவில் நடத்திய கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்களுக்குப் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கும் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’ நிகழ்வு மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி  சுப்பிரமணி “இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சி” எனும் தலைப்பில் திரையீட்டுக் காட்சியுடனான உரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

lagging of tamil language in internet


lagging of tamil language in internet

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இணையம் மிகப்பெரும் வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 1995 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 16 மில்லியன் பேர் மட்டுமே இணையம் பயன்படுத்தினர். 2023 ஆம் ஆண்டில் 5385 மில்லியன் என்று அதிகரித்திருக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 67.9 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இணையம் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், அமெரிக்கா மூன்றாமிடத்திலும், பிரேசில் நான்காமிடத்திலும், இந்தோனேசியா ஐந்தாமிடத்திலும் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, ஜப்பான், நைஜீரியா, ரஷ்யா, வங்கதேசம், மெக்சிகோ நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன.

lagging of tamil language in internet


lagging of tamil language in internet

அண்டோரா, அண்டார்க்டிகா, பிட்கேரியன், கத்தார் நாடுகளில் இருக்கும் மக்கள் அனைவரும் இணையம் பயன்படுத்துவதால், இந்நாடுகள் இணையப் பயன்பாட்டில் 100 சதவிகிதம் பெற்று முதலிடத்தில் இருக்கின்றன. இணையத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தும் நாடாக வடகொரியா இருக்கிறது. இந்நாட்டில் 0.1 சதவிகிதம் எனும் அளவில்தான் இணையப் பயன்பாடு இருக்கிறது. இந்தியாவில் 53.9 சதவிகிதம் பேர் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

lagging of tamil language in internet


lagging of tamil language in internet

உலக மொழிகளில் இணையப் பயன்பாட்டில் 329 மொழிகள் இடம் பெற்றிருந்தாலும், 162 மொழிகள் மட்டுமே இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இம்மொழிகளில் ஆங்கிலம் அதிகளவாக 59.9 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரஷ்யன் 8.7 சதவிகிதமும், ஸ்பானிஷ் 4.0 சதவிகிதமும், துருக்கிஷ் 3.3 சதவிகிதமும், பெர்சியன் 2.8 சதவிகிதமும், பிரெஞ்ச் 2.6 சதவிகிதமும், ஜெர்மன் 2.6 சதவிகிதமும், ஜப்பான் 2.2 சதவிகிதமும், போர்த்துக்கீசு 1.9 சதவிகிதமும், வியட்நாமில் 1.6 சதவிகிதமும், சீனம் 1.5 சதவிகிதமும் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மொழிகள் அனைத்தும் 1 சதவிகிதத்திற்கும் குறைவானதாகவே இருக்கின்றன.

lagging of tamil language in internet


lagging of tamil language in internet

இந்திய மொழிகளில் இந்தி 0.1 சதவிகிதம், வங்காளி 0.018 சதவிகிதம், உருது 0.010 சதவிகிதம், தமிழ் 0.0043 சதவிகிதம், மராத்தி 0.0021 சதவிகிதம், தெலுங்கு 0.0016 சதவிகிதம், கன்னடம் 0.00146 சதவிகிதம், மலையாளம் 0.00138 சதவிகிதம், குஜராத்தி 0.0007 சதவிகிதம், பஞ்சாபி 0.0005 சதவிகிதம், சமஸ்கிருதம் 0.00027 சதவிகிதம் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் இணையத்தில் தமிழ் மொழியிலான உள்ளடக்கம் 60 வது இடத்தில் இருக்கிறது. உலகின் மொழிப் பயன்பாட்டில் பத்தொன்பதாவது இடத்தில் இருந்து வரும் நம் தமிழ் மொழி இணையத்தில் 58 வது இடம் என்று பின் தங்கிப் போய்விட்டது.

lagging of tamil language in internet


lagging of tamil language in internet

சமூகத்தில் பயன்பாட்டிலிருக்கும் ஒரு மொழி, அதன் மொழித்திறன் குறைந்து கொண்டே சென்று, நாளடைவில் அந்த மொழி பேச்சு வழக்கொழிந்து தொடர்பற்றுப் போவதை மொழியின் இறப்பு என்கின்றனர். ஒரு மொழியின் இறப்புக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம், மொழியியல் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற பல காரணிகளாக இருக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தின் தாக்குதலால் தமிழ் மொழியானது பாதிப்பைச் சந்தித்து விடாமல் இருக்கவும், தமிழ் மொழியினைப் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்திடவும், இணையத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை அதிகமாக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு இளைஞர்களின் பங்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான அனைத்துப் பங்களிப்புகளைச் செய்திட இளைஞர்கள் முன் வர வேண்டும்”. இவ்வாறு பேசினார்.

முன்னதாக, நுகர்வோர் சட்டங்கள் எனும் தலைப்பில் கு. சாமிதுரை, ‘தன்னம்பிக்கை போட்டித் தேர்வுகள்’ எனும் தலைப்பில் மதுரை பாலா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள்  பாரதி, . சித்ரா, ஜோதி, சபீர்பானு மற்றும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் சோமசுந்தரி கலந்து கொண்டனர். உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையர் ஜான்சிராணி நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News