கும்பக்கரை, கொட்டகுடியில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்கத் தடை

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் கும்பக்கரை, கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-18 03:02 GMT

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சிறு துாறலாக பெய்த மழை, நேற்றும், நேற்று முன்தினமும் அதிகம் பெய்தது. நேற்று இரண்டாவது நாளாக போடியில் 24.2 மி.மீ., கூடலுாரில் 14.2 மி.மீ., மஞ்சளாறில் 27 மி.மீ., பெரியகுளத்தில் 53 மி.மீ., பெரியாறு அணையில் 6.6 மி.மீ., தேக்கடியில் 5.8 மி.மீ., சோத்துப்பாறையில் 4.5 மி.மீ., வீரபாண்டியில் 21.4 மி.மீ., மழை பெய்தது.

இந்த மழையால் போடி கொட்டகுடி ஆற்றிலும், பெரியகுளம் கும்பக்கரை அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் போடி ஆற்றில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தப்பினர்.

எனவே போடி மற்றும் கும்பக்கரையில் தற்போதைக்கு குளிக்க வர வேண்டாம். வெள்ளம் வடிந்த பின்னர் மறு அறிவிப்பு வெளியிடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News