அருவியில் தவறவிட்ட நகைகளை மீட்டு காெடுத்த கும்பக்கரை வனத்துறையினர்

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீ்ட்டுக் கொடுத்தனர்.;

Update: 2022-06-05 04:29 GMT

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் தொலைத்த நகைகளை வனத்துறையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது, தவற விட்ட நகைகளை வனத்துறையினர் மீட்டுக் கொடுத்தனர்.

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி முருகேசன் குளிக்கும் போது 6 பவுன் தங்க செயினை தண்ணீரில் தவற விட்டா். அதேபோல் அருவியில் குளித்துக் கொண்டிருந்த வடகரையை சேர்ந்த கோபால் இரண்டரை பவுன் நகையினையும், லட்சுமிபுரத்தை சேர்ந்த சித்தார்த்த பானுசந்தர் ஒண்ணரை பவுன் நகையினையும் தவற விட்டனர். தகவல் அறிந்த வனச்சரகர் டேவிட்ராஜன் தலைமையிலான குழுவினர் நகைகளை தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News