கொடைக்கானல் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் மருத்துவ முகாம்
கொடைக்கானல் வட்ட சட்டப்பணிகள் குழுவினர், தேனி நலம் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.;
கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாமினை நீதிபதிகள் தினேஷ்குமார், கார்த்திக் தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தில் கொடைக்கானல் வட்ட சட்ட பணிகள் குழுவினர் தேனி நலம் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தினர். இந்த முகாமினை நீதிபதிகள் தினேஷ்குமார், கார்த்திக் தொடங்கி வைத்தனர். வக்கீல்சங்க தலைவர் ராஜசேகரன், சங்க செயலாளர் சுரேஷ்குமார், மற்றும் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். நலம் மருத்துவமனை சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஜெயராம் நாடார் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு நலம் மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.