தேனியில் சிறுநீரக, சர்க்கரை நோய் தடுப்பு இலவச ஆலோசனை முகாம்

தேனியில் சிறுநீரக, சர்க்கரை நோய் தடுப்பு இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-05 07:17 GMT

தேனி ஒர்க் ஷாப் நகரில் நடந்த சிறுநீரக, சர்க்கரை நோய் தடுப்பு ஆலோசனை முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேனி கம்பம் ரோட்டோரம் ஒர்க் ஷாப் நகரில் உள்ள விநாயகா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மேல்மாடியில் இந்த முகாம் நடந்தது. சங்க கவுரவ ஆலோசகர் கே.ரத்தினம் முகாமினை தொடங்கி வைத்தார்.

தலைவர் சலீம்ராஜா, செயலாளர் கார்மேகம், பொருளாளர் இளங்கோவன், துணைத்தலைவர் மணிமுத்து, செயற்குழு உறுப்பினர் துரைராஜ், துணைச் செயலாளர் முத்துமணி, இணைச் செயலாளர் செந்தில் குத்து விளக்கேற்றி வைத்தனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார் முகாமிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்தார். டாக்டர் மு.காமராஜன், டி.எம்., (நெப்ராலஜி) தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு 2000ம் ரூபாய் மதிப்புள்ள ரத்த, சிறுநீரக பரிசோதனைகள இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் தமிழக அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டன. அவர்களுக்கு அரசின் காப்பீடு திட்டத்தில் மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டன.

Tags:    

Similar News