தேனி அருகே நூதன முறையில் திருட்டு: கில்லாடி வாலிபர் கைது

தான் ஒரு அனாதை என ஏமாற்றி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-13 06:33 GMT

தான் ஒரு அனாதை எனக்கூறி வீடுகளில் வேலைக்கு சேர்ந்து திருடிய சந்தோஷ்குமார் (முககவசம் அணிந்திருப்பவ்ர்) போலீசிடம் சிக்கினார்.

தான் ஒரு அனாதை, தனக்கு வேலை கொடுத்து, சோறு மட்டும் கொடுத்தால் போதும் என ஏமாற்றி வீடுகளில் திருடிய கில்லாடி வாலிபர் சிக்கினார்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் வனம், 48. இவரது வீட்டிற்கு சந்தோஷ்குமார் என்ற 18 வயது நபர் பத்து நாட்களுக்கு முன் வந்தார். தான் ஒரு அனாதை என்றும், தனக்கென யாருமில்லை எனக்கூறி வேலை தருமாறு வனத்திடம் கேட்டுள்ளர். சம்பளம் எதுவும் வேண்டாம். சோறு போட்டு தங்க இடம் கொடுத்தால் போதும் எனக்கூறியுள்ளார்.

சிறுவனின் நிலை கண்டு மனம் இறங்கிய வனம் தனது வீட்டில் தங்க வைத்து சோறு போட்டு வளர்த்துள்ளார். ஒரு வாரம் தங்கி சொன்னபடி வேலை செய்த சந்தோஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏழரை பவுன் நகை, ஆயிரத்து எழுநுாறு ரூபாய் பணம், ஒரு டூ வீலரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ்குமார் இதேபோல் திண்டுக்கல், மதுரை அவனியாபுரம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி அங்கெல்லாம் திருட்டு வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது. சில நாட்களாக சந்தோஷ்குமாரை தேடி வந்த போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News