தமிழக எல்லையோரம் கேரள கழிவுகளை கொட்டி அட்டகாசம்

கேரளாவில் உள்ள கழிவுகளை வாகனங்களில் எடுத்து வந்து தமிழக எல்லையோரம் கொட்டிச் செல்கின்றனர்.;

Update: 2022-03-31 02:45 GMT

குமுளி ரோட்டோரம் தமிழக எல்லைப்பகுதியில் கேரள கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.

கேரளாவில் இருந்து கழிவு பொருட்கள் ஏற்றிய லாரிகளை தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர். குமுளி வழியாக இவர்கள் வரும் போது தமிழகத்தை சேர்ந்த இரண்டு சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டி உள்ளது. வனத்துறை சோதனைச்சாவடி, போலீஸ் சோதனை சாவடிகளை கடந்து வருகின்றனர். வந்து குமுளி செல்லும் தமிழக ரோட்டோரம் கொட்டி விடுகின்றனர். இதனை வனவிலங்குகள் சாப்பிடுகின்றனர். இதனால் இவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில கி.மீ., பயணித்தால் மேலும் நான்கு தமிழக சோதனை சாவடிகளை கடக்க வேண்டும். அதனையும் எளிதில் கடந்து வந்து கூடலுார் முதல் உத்தமபாளையம் வரை பயணித்து கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இரவிலேயே பயணிக்கின்றனர். இந்த லாரிகள் 'மாமூலாக' வருவதால் (சோதனை சாவடிகளுக்கு வருவாய் தருவதால்) தமிழக சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அனுப்பி விடுகின்றனர் என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News