தேக்கடிக்கு சென்ற தமிழக அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கேரளா அடாவடி

மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை கேரள வனத்துறை தடுத்து நிறுத்தி அடாவடி செய்துள்ளது.

Update: 2022-07-27 03:42 GMT

 தேனி அருகே சின்னமனுாரில் கேரள வனத்துறை ஜீப் காய்கறிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்தது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கேரள வனத்துறையின் முரண்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்ஸை, தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்து கொண்டிருந்த போது, கேரள வனத்துறை ஜீப் சின்னமனுாரில் காய்கறிகளை கொள்முதல் செய்து கொண்டிருந்தது.

இந்த ஜீப்பினை படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட தமிழக விவசாயிகள், 'கேரளாவை போல் நாங்களும் செயல்பட்டு வனத்துறை ஜீப்பினை சிறைபிடித்திருந்தால், கேரள அதிகாரிகள் மிகவும் அவமானப்பட்டு போய் இருப்பார்கள். தமிழகத்திற்குள் நுழையும் கேரள வனத்துறை ஜீப் மற்றும் வாகனங்களை நாங்கள் நினைத்தால் சில நொடிகளில் சிறை பிடிப்போம். இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போக்குகளை கேரளா நிறுத்தாவிட்டால், நாங்களும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News