தேனி மாவட்ட வரைபடத்தில் கேரள பகுதிகள்: தமிழக விவசாயிகள் பதிலடி

Mullaperiyar Dam Latest News - தேனி மாவட்ட வரைபடத்தில் கேரள பகுதிகளை இணைத்து கேரள விஷமிகளுக்கு தமிழக விவசாயிகள் கடுமையான பதிலடி கொடுத்து உள்ளனர்.

Update: 2022-07-25 04:09 GMT

கேரளாவின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்தின் தேனி மாவட்டத்துடன் இணைத்து  விவசாயிகள் வெளியிட்டுள்ள புதிய வரைபடம்.

Mullaperiyar Dam Latest News -முல்லைப்பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என கேரளாவில் சில விஷமிகள் கடுமையான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கு இவர்கள் சமூக வலைதளங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பணமும் சம்பாதித்து கொழுத்து வாழ்கின்றனர். இதுவரை பொறுமை காத்த தமிழக விவசாயிகள் அதே பாணியில் கேரளாவி்ற்கு பதிலடி தந்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையினை இடிக்க வேண்டும் என கேரளாவில் சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகள் வெளியாகின. தமிழக விவசாயிகள் 'பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்' என்பதை குறிக்கும் வகையில் 'ANEX DPU IN TAMILNADU' என்ற ஹேஸ்டேக்குகளை சமூக வலைதளங்களி்ல் தெறிக்க விட்டனர். இந்த ஹேஸ்டேக்குகளை கேரள தமிழர்களை அதிகளவில் பகிர்ந்தனர்.

புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அமைச்சர் ஒருவர் பேட்டி கொடுத்தார். அடுத்த சில விநாடிகளில் கேரள நீதிபதி கே.டி.தாமஸ், 'முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனக்கு அணைக்கு அருகே ஐந்து ஏக்கர் நிலம் தாருங்கள். விவசாயம் செய்து பிழைத்துக் கொள்கிறேன்' எனக்கூறிய பேட்டியை சமூக வலைதளங்களில் தமிழக விவசாயிகள் தெறிக்க விட்டனர். தமிழகத்தில் அவர் பெயரால் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கேரள நீதிமான் கே.டி.தாமஸ் பெயரை வைப்போம் என ஹேஸ்டேக்குகளை பறக்க விட்டனர்.

இதனை பார்த்து கேரள விஷமிகள் திகைத்து நின்ற வேளையில், 'தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தேனி மாவட்டத்துடன் இணைத்து, வரைபடங்களை வெளியிட்டனர். கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினர். கடந்த 2011ம் ஆண்டு மூணாறு, உட்பட இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக நடந்த போராட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அடுத்த அதிரடியாக இடுக்கி மாவட்ட மலையக தமிழர்களின் கடுமை நிறைந்த வாழ்வியல்சூழல்களை வீடியோ எடுத்து, அவர்கள் தாங்கள் தமிழகத்துடன் இணைய விரும்பும் பேட்டிகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர சொந்த நிதி ஆதாரங்களை உருவாக்கினர். விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்தனர். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் தேவைப்பட்டால் ஒருசில நிமிடங்களில் பல லட்சம் பேரை திரட்டும் வகையில் புதிய வலுவான நெட்ஒர்க்கினை ஐந்து தமிழக மாவட்டங்களில் உருவாக்கியதோடு, இந்த விவரங்களையும் சமூக வலைதளங்களில் பரப்பினர். தமிழக அதிகாரிகளும் கேரளாவின் போக்குக்கு போர்க்கொடி துாக்கி நிற்கும் நிலையில், கண்காணிப்புக்குழுவின் ஒருதலைபட்சமான போக்கினையும் தமிழக அரசு வாட்டி எடுத்து வருகிறது.

ஆக தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசும் களம் இறங்கி விட்டது என்பதையும் மறைமுகமாக தமிழகம் கேரளாவிற்கு உணர்த்தி விட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களாக கேரள விஷமிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இனிமேல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரளா ஒரு எட்டு எடுத்து வைத்தால், தமிழர்கள் பத்து எட்டு எடுத்து வைக்கும் அளவுக்கு பலம் பெற்றுள்ளதோடு, அந்த பலத்தை கேரளாவிற்கும் உணர்த்தி விட்டனர். இனிமேல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் 'கேரளாவின் ஒவ்வொரு வினைக்கும், தமிழகத்தில் ஒரு எதிர்வினையினை' எதிர்பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News