கேரளாவில் உள்ள தமிழக பொதுபணித்துறை மின்வாரிய குடியிருப்புகளை சீரமைக்க தடை

கேரளாவில் உள்ள தமிழக பொதுபணித்துறை குடியிருப்பு, மின்வாரிய ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க கேரள அரசு தடுத்து வருகிறது.

Update: 2022-03-12 02:45 GMT

பைல் படம்

முல்லை பெரியாறு அணையின் ஒரு பகுதியான பேபி அணையினை சீரமைக்க விடாமலும், பேபி அணைக்கு செல்லும் மரங்களை வெட்ட அனுமதி தர மறு்ததும் கேரள அரசு பிடிவாதம் செய்து வருகிறது. முல்லை பெரியாறு அணையினை பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின்  குடும்பங்களுக்கான குடியிருப்பு, மற்றும் மின்வாரிய அதிகாரிகள்  குடியிருப்புகள் தேக்கடி செல்லும் பாதையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் இடத்தில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குடியிருக்க தகுதி இல்லாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.

இதனை தமிழக அரசு சீரமைக்க முடிவு செய்து, சிமெண்ட் பூச்சுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தளவாட பொருட்களை கொண்டு சென்றது. வனத்துறை சோதனை சாவடிகளை கடந்து தான் இந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் வனத்துறை சோதனை சாவடியிலேயே தமிழக வாகனங்களை மடக்கிய கேரள அதிகாரிகள் அதனை திரும்ப அனுப்பி விட்டனர். இதனால் இந்த குடியிருப்புகளை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளை சீரமைக்காவிட்டால், அதிகாரிகள் இங்கு  தங்கியிருந்து அணையினை பராமரிப்பது சிரமம் ஆகி விடும். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, கேரள அரசினை கண்டிக்க வேண்டும் என தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News