தேனி அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி அருகே கொடுவிலார்பட்டி கண்மாய் 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

Update: 2021-12-09 02:47 GMT

22 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி வழியும் கொடுவிலார்பட்டி கண்மாயில் விவசாயிகள் மலர்துாவி தண்ணீரை வரவேற்றனர்.

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கண்மாய் 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது.

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கண்மாய் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பி.டி.ஆர்., கால்வாய் மூலம் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இந்த கண்மாய் நிறைந்தால் கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, கோட்டைப்பட்டி, வீரசின்னம்மாள்புரம் கிராமங்களில் பலநுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்மாய் நிறைந்து. அப்போது கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இடைப்பட்ட காலத்தில் கண்மாய் முழுமையாக நிரம்பவில்லை. அவ்வப்போது கிடைத்த மழையில் ஓரளவு தண்ணீர் வரும். இந்த இடைப்பட்ட காலத்தில் கிராம நுாறு நாள் வேலை திட்டத்தில் கண்மாய் துார்வாறும் பணிகள் நடைபெற்றன. கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

ஆனால் இப்பணிகள் முழுமையாக முடியவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பெய்த மழை மற்றும் பி.டி.ஆர்., கால்வாயில் கிடைத்த அதிகப்படியான நீர் வரத்து காரணமாக இந்த முறை கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரில் கிராம மக்களும், விவசாயிகளும் மலர்துாவி தண்ணீரை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News