கடவுளுக்கு நன்றி சொல்வோம் என்ற பெயரில் 'கலக்கல்' விழா
தேனி தொழிலதிபர் வி.ஆர்.ராஜன் 'கடவுளுக்கு நன்றி சொல்வோம்' என்ற வித்தியாசமான விழாவை நடத்தினார்.
தேனி அல்லிநகரத்தை சேர்ந்த தொழிலதிபர் வி.ஆர்.ராஜன் சமூக சேவையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இவர், கொரோனா காலத்தில் தேனி, பெரியகுளம், பழனிசெட்டிபட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று துப்புரவு பணியாளர்களுக்கு உணவு, உடைகள் வழங்கினார். அதேபோல் கல்வி உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளும் வழங்கினார். இவரது பிறந்தநாள் விழாவை 'கடவுளுக்கு நன்றி சொல்வோம்' என்ற விழாவாக தேனியில் நடத்தினார்.
இந்த விழாவில் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் அண்ணாச்சி, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவர் சுபேதார் மகாராஜன், ரோட்டரி பிரமுகர் சௌந்திரபாண்டியன், தொழிலதிபர் பொறியாளர் பாலசுப்ரமணி, தொழிலதிபர் சீனிவாசன், வழக்கறிஞர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம், வணிகர் சங்க பேரரமைப்பின் தலைவர் செல்வக்குமார், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத் தலைவர் ஆடிட்டர் ஜெகதீஷ். தேனி நகர தி.மு.க. பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், இந்தியன் ரெட் கிராஸ் முன்னாள் செயலர் முகமது பாட்சா. தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் சர்புதீன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் மாவட்ட அமைப்பாளர் கண்ணன் பெரியகுளம் அரிமா மற்றும் விவசாய சங்க பிரமுகர் ராஜசேகர், வெளிச்சம் அறக்கட்டளை தலைவர் சிதம்பரம், ஆண்டிப்பட்டி உமாநாராயணன் பதிப்பகம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பட்டிமன்ற நடுவர் என்.வீ.வீ.இளங்கோ, முன்னாள் கூட்டுறவு சொசைட்டி மேலாளர் மகாதேவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில துணைச் செயலாளர் கோமதிஆனந்தராஜ், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி, செயலாளர் அ.அன்புவடிவேல், கௌரவத் தலைவர் முனைவர். ஜோசப் சேவியர், ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் நெல்சன், ஷேக் முகம்மது, மருத்துவர் பிரித்தா நிலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தையல் உதவி, மருத்துவ உதவிகள், பழங்குடி இன குழந்தைகளை உயர்கல்விக்கு செல்லும் வரை கல்வி பயில தத்தெடுக்கும் நிகழ்ச்சிகள், துப்புரவு பணியாளர்களை கவுரவித்து உடைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி நிவேதா பாராட்டப்பட்டார். பழங்குடி இன மக்களுக்காக களப்பணியாற்றும் என்.ஜி.ஓ. க்களுக்கு பாராட்டு, விழாவும், விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.