தேனியில் வரும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.;

Update: 2022-05-04 02:15 GMT

வரும் மே 6ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, மாஸ்டர் டிகிரி, பொறியியல் படிப்புகள் உட்பட அத்தனை படிப்பு படித்தவர்களும் பங்கேற்கலாம். காலை 10 மணி முதல் தனியார் துறையினர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ௦௪௫௪௬ - 254510 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம். இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் நடைபெறுகிறது என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News