பெரியகுளம்: தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகை அடகு வைத்து மோசடி
பெரியகுளம் வடுகபட்டியில் தனியார் நகை அடகு கடையில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த மூன்று பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த துரை என்பவர் பெரியகுளம் வடுகபட்டியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் பணிபுரியும் சங்கீதா, அவரது கணவர் பிரசாத், தம்பி கவுதம் ஆகியோர் உதவியுடன் 102 பேரின் பெயரில் போலியாக கவரிங் நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திரும்ப கேட்டதற்கு சங்கீதா தற்கொலை செய்து கொண்டு சிக்கலி்ல் மாட்டி விடுவேன் என துரையை மிரட்டி உள்ளார். துரை கொடுத்த புகாரில் பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.