ஜன. 4 ல் பொங்கல் தொகுப்பு விநியோகம்: தேனி மாவட்ட நிர்வாகம் தகவல்

தேனி மாவட்டத்தில் ஜனவரி 4 முதல் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது;

Update: 2021-12-31 03:15 GMT

தேனி மாவட்டத்தில் ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு  ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 150 முதல் 200 பேருக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும். கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News