பேரூராட்சி அலுவலகம் வந்து செல்ல 80 கி.மீ. தொலைவுக்கு பயணிக்கும் மக்கள்

மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல 80 கி.மீ. பயணிக்க வேண்டிய அவசியம் உள்ளது

Update: 2022-07-09 11:47 GMT

சின்னமனுாரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளது மேகமலை பேரூராட்சி. இந்த பேரூராட்சி எல்லைக்குள் மேகமலை கிராமம் மட்டுமின்றன, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ், வெண்ணியாறு, இரவங்கலாறு என்ற ஐந்து கிராமங்களும் பல சிறிய குடியிருப்புகளும் உள்ளன. இங்கு செயல்பட்டு வந்த பேரூராட்சி அலுவலகம் கடந்த கொரோனா காலகட்டத்தில் உத்தமபாளையத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும், பேரூராட்சி அலுவலகம் மேகமலைக்கு மாற்றப்படவில்லை.

தற்போது மேகலையில் உள்ள பேரூராட்சி அலுவலகம் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது. அலுவலர்கள், பைல்கள் அனைத்தும் உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் தங்களது சொந்த பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்ல மட்டும் 80 கி.மீ., தாரம் பயணிக்க வேண்டும். இந்த சிக்கல் குறித்து மேகமலை பேரூராட்சி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், அதிகாரிகளும், அலுவலர்களும் தங்கள் சொந்த வசதிக்காக பேரூராட்சி அலுவலகத்தினை இன்னும் மேகமலைக்கு மாற்றாமல், உத்தமபாளையத்திலேயே செயல்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News