இந்திய தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறதா என்ற சந்தேகமும் கேள்வியும்

இந்தியாவில் 2024 ல் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு முன்னோடியாக சிஐஏ தனது இறக்கைகளை விரிக்கிறது;

Update: 2023-02-06 23:45 GMT

பைல் படம்

இந்தியாவில், 2024ல் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு முன்னோடியாக சிஐஏ தனது இறக்கைகளை விரிக்கிறது. சிஐஏ ஏஜென்ட்களும் பல மீடியாக்களும் மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டு உள்ளனர். இந்திய தேர்தலில் செல்வாக்கு செலுத்துவதற்காக ஏராளமான அமெரிக்க டாலர்கள் இந்தியாவில் பலருக்கும் வழங்கப்பட்டு வருகிறது என வெளிவரும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.

தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியாவில் பலவீனமான தலைமையை மேற்கு உலகம் எப்போதும் விரும்புகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க முரண்பட்ட நலன்களைக் கொண்ட பிராந்தியக் கட்சிகள் கைகோர்த்தால் மத்திய அரசு பலவீனமாகிப்போகும். இந்தியாவில் இதுவரை ஆட்சி செய்த பல தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளின் நலனுக்காக தேசிய நலன்களில் எவ்வாறு சமரசம் செய்தனர் என்பதை அறிவோம்.

மோடி தார்மீக ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பலவீனமானவர் அல்ல. இந்திய நலனுக்கு எதிராக யாரிடமும் சமரசம் செய்யவில்லை. மேலும், பாஜக 302 இடங்களைப் பெற்று மத்தியில் வலுவாக உள்ளது.

உக்ரேனிய தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டதை நாம் மறந்து விடக்கூடாது. ஆர்க்டிக் பிராந்தியத்தையும் அங்கு இருக்கும் கனிம வளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே அவர்களின் கைப்பாவையாக ஒரு ஜோக்கரை தலைமைப் பொறுப்பில் அமர்த்தியது.

இந்தியாவில் பாசிசம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக தனது பிரசாரத்தை இயக்கவும், மதச்சார்பின்மை மற்றும் தாராளவாத சமூகத்திற்காக உதவவும் அமெரிக்காவிற்கு ஏஜண்டுகள் தேவைப்படுவது இதனால்தான். சிஐஏ -வின்  இந்த ஏஜெண்டுகள், மதச்சார்பற்ற தாராளவாத ஊடகங்களில் புழங்கும் பணத்துடன் சேர்ந்து உக்ரைனில் அவர்கள் செய்ததை இந்தியாவிலும் செய்ய முயற்சிப்பார்கள். தேர்தலில் மக்களிடம் செல்வாக்கு செலுத்துவார்கள்.

போலியான சமூக ஊடக IDக்கள் உருவாக்கப்பட்டு, செல்வாக்கு மிக்கவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் வேலை 24x7 மணி நேரமும் நமது பிரதமரை பற்றி அவதூறு பிரசாரம் செய்வதே ஆகும். அவர்களின் வேலை பொது கருத்தை மாற்றுவதும், அரசாங்க எதிர்ப்பு கருத்துகளை திணிப்பதும் ஆகும். இந்தியாவில் இந்த பணி ஒரு Foundation மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பெங்களூரு சார்ந்த என்ஜிஓ பல இந்திய ஊடகங்களுக்கு நிதியளிக்கிறது.

வளர்ந்து வரும் இந்தியா அமெரிக்காவிற்கு நல்லதல்ல. விக்டோரியா நுலண்ட் (Under Secretary of State for Political Affairs) ஆட்சி மாற்றங்கள் செய்வதில் நிபுணர். அமெரிக்க நலன்களுக்கு உதவும் ஒரு பொம்மை அரசாங்கத்தை வைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஆசிய பிராந்தியத்தில் சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவை தவிர வேறு யாரும் இல்லை என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றொரு வல்லரசாக மாறுவதை அது விரும்பவில்லை. இதற்காக இந்தியாவில் தங்களின் விருப்பப்படி செயல்படும் ஒருவரை பிரதமராக்க அமெரிக்கா விரும்புகிறது.

சமீபத்தில் ஆம் ஆத்மியின் குஜராத் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வும் சனாதனம் மற்றும் கோயில்கள் பற்றி டெல்லியில் கூறிய தவறான கருத்து நுாலண்ட் டூல் கிட்டின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய உலகில், மோடிக்கு ஒரு தனிப்பட்ட வலுவான குணம் உள்ளது.   உலகளாவிய சதி திட்டங்கள் மோடியை அகற்ற கடும் முயற்சிகள் செய்கின்றன. அவர்களால் அவரது தேர்தல் வெற்றிகளை தடுக்க முடியவில்லை.

2024 தேர்தலுக்கான பாதை பாஜவுக்கு  கடும் சவாலாகவும் கரடுமுரடானதாகவும இருக்கலாம். IF & BUT இல்லாமல் நம் தலைவருடன் நிற்பதே நமது தர்மம். பாரதத்தையும், சனாதனத்தையும் காப்பாற்ற மோடி இந்தியாவிற்கு தேவை என்பதை இந்திய மக்களும் உணர்ந்துள்ளதால் அமெரிக்காவின்  முயற்சி தோல்வியில் முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Tags:    

Similar News