மலைக்கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன்பொருட்கள் கடத்தலா ? அதிகாரிகள் விசாரணை

போடி மலைக்கிராமமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் பொங்கல் தொகுப்பு கேரளாவிற்கு கடத்தப்பட்டதா என விசாரணை நடக்கிறது;

Update: 2022-01-06 13:45 GMT

கேரள எல்லையில் போடி மெட்டில் செயல்படும் தமிழக ரேஷன் கடை.யில் விசாரணை நடத்தும் அதிகாரிகள்

போடி மலைக்கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி மலைக்கிராமங்களான மணப்பட்டி, கொட்டகுடி, முட்டம், முதுவாக்குடி, முந்தல், சென்ட்ரல் போன்ற மலைக்கிராமங்களில் பல ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் முறையாக கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. குறிப்பாக அரிசி, பருப்பு, பாமாயில், ஜீனி உட்பட ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பகிரங்கமாக பட்டப்பகலிலேயே கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சோதனைச்சாவடிகளில் இந்த பொருட்களை மலைக்கிராமத்திற்கு வழங்க எடுத்துச் செல்வதாக கூறி, ரேஷன் கடை பணியாளர்களே வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர். தற்போது வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பும் இது போன்று கேரளாவிற்கு கடத்தப்படுகிறது என பொதுமக்கள் போடி தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் போடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News