வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, வாகனங்களுக்கான கடன் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-10-02 02:45 GMT

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ்.

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கு உரிய ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதம் ஆனது.ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடனுக்கான தவணைத்தொகை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News