தென்மேற்கு பருவமழை தீவிரம்: பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஒரு வாரமாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தேனி மாவட்டத்திலும் கடந்த ஐந்து நாட்களாக இடைவிடாத சாரல் பெய்து வருகிறது. இந்த மழையால் நீர் வரத்து அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரியாறு அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 5400 கனஅடியை எட்டி விட்டது.
கமல்ஹாசன் துணையோடு பிரபாஸ் ஜெயித்தாரா? கல்கி 2898 ஏடி திரைவிமர்சனம்!
இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம்: அரண்மனைப்புதுார் 5.2, வீரபாண்டி 20.4, பெரியகுளம்- 2, சோத்துப்பாறை- 2.5, வைகை அணை- 1.4, போடிநாயக்கனுார்- 3.6, உத்தமபாளையம்- 7.8, கூடலுார்- 11.8, பெரியாறு அணை- 55 மி.மீ., தேக்கடி 47.2 மி.மீ., சண்முகாநதி 17.4 மி.மீ., மழை பதிவானது. குறிப்பாக கேரளாவில் பெரியாறு அணை நீர் வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்து விநாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடியை எட்டி விட்டது. அணையின் நீர் மட்டம் 121.80 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நீர் மட்டம் 125 அடியை தாண்டும். பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 48.29 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 700 கனஅடியாகவும், நீர் திறப்பு 69 கனஅடியாகவும் உள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 122.73 அடியாகவும், சண்முகாநதி அணை நீர் மட்டம் 35.60 அடியாகவும் உள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும், மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்கான நெல் நடவுப்பணிகள் தொடங்கி உள்ளன.