கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தேனி மாவட்டத்தில் என்ன செய்யலாம்

தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பத்தின் நிலை குறித்த தகவல்களை பெற உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்

Update: 2023-09-20 15:30 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்களை பெறுவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவின் போது 2000 பயனாளி களுக்கு வங்கி ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டன. இதர பயனாளர்களுக்கு படிப்படியாக வங்கி ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கிலேயே தொகை வரவு வைக்கப்படுகிறது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வங்கியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு எப்போது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயனாளிகளாக தேர்வு செய்யப்படாதவர்களுக்கு தேர்வு செய்யப்படாமை குறித்து 18.09.2023 முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.

இ-சேவை மையம் மூலமாக மட்டுமே விண்ணப்பபம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து அலுவலகங்களில் சமர்பித்திடவோ, அஞ்சல் மூலம் அனுப்பவோ கூடாது. மேல்முறையீட்டிற்கான கட்டணம் ஏதும் இ-சேவை மையங்களில் செலுத்த தேவையில்லை. பயனாளிகளாக தேர்வு செய்யப்படாத நபர்கள் தேர்வு செய்யப்படாமைக்கான காரணம் குறித்தும், மேல்முறையீடு செய்வது குறித்தும் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறிந்து கொள்வதற்கு 19.09.2023 முதல் 29.09.2023 வரை உதவி மையங்கள் செயல்படும். இந்த உதவி மையங்களுக்கு தகவல் கோரி செல்லும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையினை எடுத்து செல்ல வேண்டும்.

கீழ்க்கண்ட உதவி மையங்களின் தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 05.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

1. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், தேனி-04546 250101,

2. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரியகுளம்-04546 231256,

3. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உத்தமபாளையம்-04554 265002,

4. வட்டாட்சியர் அலுவலகம், தேனி-04546 255133,

5. வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி-04546 242234,

6. வட்டாட்சியர் அலுவலகம், பெரியகுளம்-04546 231215

7. வட்டாட்சியர் அலுவலகம், போடிநாயக்கனூர்-04546 280124,

8. வட்டாட்சியர் அலுவலகம், உத்தமபாளையம்-04554 265226

இத்திட்டத்திற்காக பயனாளிகளிடமிருந்து OTP எண் எதுவும் கேட்கப்படுவதில்லை. போலி தொலைபேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள் மற்றும் தவறான வாட்ஸ் அப் செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இது குறித்து சந்தேகம் எதும் இருந்தால் காவல்துறையினரிடம் புகார் அளித்திட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News