சுற்றி வளைக்கப்படும் இந்திராகாந்தி குடும்பம்...!

Indira Gandhi Family -தனித்துப் போராடுவதா? தப்பி ஓடுவதா? என்று இந்திராகாந்தி குடும்ப உறுப்பினர்கள் குழம்பிப் போயுள்ளனர்;

Update: 2022-09-02 02:00 GMT

பைல் படம்

Indira Gandhi Family -நேஷனல் ஹெரால்ட் கேஸும், PMLA Act ம் போதும், இந்திரா காந்தி குடும்பத்தினரை ஜெயிலில் தள்ள! ஆனால் செய்யவில்லை! ஏன்? நேஷனல் ஹெரால்ட் கேஸ் சம்பந்தமாக தொடர்ந்து ராகுல், சோனியா காந்திகளுக்கு ED விசாரணை மூலம் பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. அந்த பத்திரிக்கை ஆபீஸ் சீல் வைக்கப்பட்டது. வீட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் விசாரணையின் முடிவிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

ஏன், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே சுப்பிரமணியன் சாமி, அவர்கள் பெயிலில் வெளிவர ஆட்சேபணை செய்திருந்தால் அவர்கள் அன்றே கைது செய்யப்பட்டிருக்கக்கூடும். ஏனெனில், அந்த ஆதாரங்களும், சட்டங்களும் அவ்வளவு கடினமானவை. ஆனால், அவரும் செய்யவில்லை. 8 வருடங்களாக மோடி அரசும் அதை செய்யவில்லை.

ஏனெனில், அப்படிப்பட்ட கைதுகள் இந்திராகாந்தி குடும்பத்தின் மேல் ஒரு பரிதாப உணர்வை மக்களிடையே விதைத்து அவர்களுக்கு மீண்டெழ ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். அதனால் கடும் அழுத்தங்கள் மூலம் அவர்கள் மக்களின் மனதில் மட்டும் என்ன, கட்சிக்காரர்களின் மனதிலிருந்தே அகற்றப்படுவார்கள்.

இந்திரா காந்தி குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை ஒரு லுக்அவுட் நோட்டீஸ் மூலம் தடுத்து விடவும் முடியும். ஆனால், அதை ஏன் செய்யவில்லை? அப்படி செய்தால் அவர்கள் வெளிநாடு செல்வதும் தடுக்கப்படும். அது மட்டுமல்ல, சோனியாவின் உடல்நிலை மோசமாகவே உள்ளது.அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டால் உடல்நிலை மோசமாகி விடலாம். அப்படிப்பட்ட முடிவுகள், மோடி அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி விடும். ஆக இந்திரா காந்தி குடும்பத்தினர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் திறந்தே இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வேளியேறுகின்றனர். கட்சிக்கு தேர்தல் நடத்த தேதி October 17 என்று குறிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அசோக் கெலாட் போல ஒருவரை பதவியில் அமர்த்துவார்கள்.போட்டி ஏற்பட அனுமதிக்க மாட்டார்கள். நமக்கே இவ்வளவு விஷங்கள் தெரியும்போது, அரசு எவ்வளவு யோசிக்கும்! அதைவிட, கார்னர் செய்யப்பட்ட இந்திரா காந்தி குடும்பம் எப்படி யோசிக்கும்!

அதற்கு மாற்றாக, 'இந்திரா காந்தி குடும்பம் பாதுகாப்பாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக சோனியாவின் உடல் நிலையைக் காரணமாக்கி சிகிச்சைக்காக குடும்பத்தோடு வெளிநாடு செல்கிறார்கள். அதே வேளையில் ராகுல் காந்தி ஏற்கெனவே அறிவித்த 'இந்தியா முழுவதுமான கால்நடைப் பயணம்' தொடங்கியாக வேண்டும். ஏனெனில், கட்சித் தேர்தலில் போட்டியின்றி அசோக் கெலாட் போன்ற ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், 'அவர் தீவிர அரசியலில் உள்ளார்' என்பதை மக்களிடையே பரப்பவும், கட்சி தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிரூபிக்கவும் இது அவசியம். எனவே சோனியா அங்கேயே தங்கி சிகிச்சையை தொடரவும், ராகுல் திரும்பி வரவே வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இந்த சூழ்நிலையில் மோடி அரசு என்ன செய்யும்.அவர்களை சட்டத்தின் மூலம் மட்டுமே தண்டிக்கவும், அவர்களை தனிமைப்படுத்தவும் காய் நகர்த்தும்.இதில் ஒரு முக்கியமான விஷயம் எனவென்றால், இந்திரா காந்தி குடும்பத்திற்கு வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் ஏராளம். அது அவர்களின் ராஜபோக வாழ்க்கையை உறுதி செய்யும். ஆனால், அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் என்ற அங்கீகாரமே அவர்களை காக்கும் வளையம்.

அது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் சொத்துக்கள் ஏராளமானவை. அரசியலைக் கூட விட்டுக் கொடுக்க இந்திரா காந்திகுடும்பம் சம்மதிக்கலாம். ஆனால் கட்சியின் சொத்துக்களை இழக்க கடைசி வரை போராடும் என்பதால், தனக்கு வேண்டியவர்களை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை தன் கைக்குள் வைத்திருக்க பகீரத பிரயத்தனம் செய்யும் என்பதை யாராலுமே மறுக்க முடியாது.

இது சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ சப்பை மேட்டர் என்று தோன்றும். எவ்வளவு சிக்கல்கள் இதன் பின்னால் ஒளிந்திருக்கிறது என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த செஸ் போட்டியில் மோடி அரசு செக் & மேட் செய்யவே முயற்சிக்கிறது. PMLA Act மூலம் இன்றுகூட அரெஸ்ட் செய்ய முடியும் என்றாலும் அதை மோடி அரசு செய்யாது. அதற்கு மாற்றாக தாமதமானாலும் வழக்கின் மூலமாக நீதிபதியால் தண்டிக்கப்படவோ அல்லது இந்த Status Quo தொடர்ந்து, தேர்தல் மூலமோ, முற்றிலுமோ தான் வீழ்த்தப்படுவார்கள்.

அதற்காக, பா.ஜ.க சுற்றி இருக்கும் காய்களை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டி எடுக்கிறது. இதை இந்திரா காந்தி குடும்பம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. இன்றைய நிலையில், கார்னர் செய்யப்பட்ட நிலையில் இந்திராகாந்தி குடும்பத்தினர் உள்ளனர்.!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News