இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை வியப்பின் உச்சியில் உலக நாடுகள்
உக்ரைன் போர்க்களத்தில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையின் துல்லியமான செயல்பாட்டை கண்டு, ஒட்டுமொத்த உலகமும் வியந்துள்ளது;
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் சொந்த தயாரிப்பு. பல்வேறு கட்ட வேகங்களில், பல்வேறு கட்ட தொலைதுாரங்களை கடந்து இலக்குகளை துல்லியமாக தாக்கும் அளவு இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. பல முறை இந்த ஏவுகணையினை சோதித்து இந்தியா பரிசோதித்துள்ளது. அத்தனை பரிசோதனைகளும் துல்லியாகவே இருந்தன. இந்த ஏவுகணையினை இந்தியா தனது மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்தது.
இந்த நட்பு நாடுகளின் பட்டியலில் சோவியத் ரஷ்யாவும் இருந்ததால், ரஷ்யா இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையினை வாங்கியது. பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகில் ஈடுஇணை இல்லை. இது போன்ற ஏவுகணை அமெரிக்காவிடம் கூட கிடையாது என்று இந்தியா கூறியிருந்தது. இருப்பினும் சோவியத் ரஷ்யா இதுவரை இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை யினை உக்ரைன் போரில் களம் இறக்காமல் இருந்தது.
ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும், உக்ரைனுக்கு கடுமையான ஆயுதங்களையும், வான் பாதுகாப்பு தடுப்பு சாதனங்க ளையும் வழங்கியிருந்தன. அமெரிக்கா உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளையும் உக்ரைனுக்கு வழங்கியது. இதனால் எரிச்சல் அடைந்த சோவியத் ரஷ்யா தனது போர் உத்தியை சற்று மேம்படுத்தி உள்ளது. வழக்கமான மரபு சார்ந்த ஆயுதங்களை கீழே போட்டு விட்டு நவீன ஆயுதங்களை கையில் எடுத்துள்ளது.
அந்த பட்டியலில் இந்தியா முதலில் எடுத்த ஆயுதம் பிரம்மோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணையினை ரஷ்யா பயன்படுத்த தொடங்கியதும், போரின் திசை மாறியது. பிரம்மோஸ் ஏவுகணையினை நேட்டோ நாடுகளின் எந்த வான் தடுப்பு சாதனங்களாலும், ரேடார்களாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தவிர நிர்ணயித்த இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் உக்ரைன் போரில் ரஷ்யாவின் கை மீண்டும் உயர்ந்துள்ளது. சமீபகாலமாக சரிவை சந்தித்து வந்த ரஷ்யப்படைகள் தற்போது பிரம்மோஸ் கொடுத்த தைரியத்தில் வேகமாக முன்னேறுகின்றன.
ரஷ்யாவும் இன்னும் ஏவுகணைகளை கொடுங்கள் என இந்தியாவிடம் கேட்கிறது. ஆனால் இந்தியா தற்போது ஏவுகணைகளை கொடுத்தால், போரின் போக்கே மாறி விடும். போரின் உக்கிரம் அதிகரித்து விடும் என தயங்கி நிற்கிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளும் ரஷ்யாவிற்கு பிரம்மோஸ் தர வேண்டாம் என இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளன. அந்த அளவுக்கு போரின் போக்கினை பிரம்மோஸ் மாற்றி விட்டது.
போர் நிலவரங்களை கவனித்து வரும் உலக நாடுகள் அனைத்தும், இந்தியாவிடம் தங்கள் நாட்டிற்கும் பிரம்மோஸ் கொடுக்குமாறு கேட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் போர் ஆயுதங்களின் வணிக வாய்ப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. ஆனால் ஆயுதங்கள் கேட்கும் நாடுகளுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இந்தியா உலக நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவின் பரம எதிரிகளான பாக்கிஸ்தானும், சீனாவும் இந்த சூழலை கண்டு சற்று கலங்கிப்போய் உள்ளன. காரணம் ரஷ்யா பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணை முதல் ரகத்தை சேர்ந்தது. இதுவே இந்த போடு போடுகிறது. இந்தியாவிடம் தற்போது மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் பல அடுக்குகள் உள்ளன. அதெல்லாம் களத்திற்கு வந்தால், தாக்குப்பிடிக்க முடியுமா? என்பதே பாக்., சீனா நாடுகள் பதற முக்கிய காரணம் என உலக நிபுணர்கள் வர்ணித்து வருகின்றனர். தற்போது பா.ஜ.,வின் சோசியல் மீடியாக்கள் அத்தனையும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையின் பெருமைகளை பற்றியே பேசி வருகின்றன. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கார்கில் வெற்றி தின விழாவில் பேசும் போது, இந்தியா தேவைப்பட்டால், எல்லைக்கோட்டை தாண்ட தயங்காது என பேசியிருப்பதன் அர்த்தம் புரிகிறதா? எனவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.